எடையளவு சட்டத்தை பின்பற்றாத 13 நகைக்கடைகள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை


எடையளவு சட்டத்தை பின்பற்றாத 13 நகைக்கடைகள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 11 May 2018 3:40 AM IST (Updated: 11 May 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் எடையளவு சட்டத்தை பின்பற்றாத 13 நகைக்கடைகள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருப்பூர், 

சென்னை தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் உத்தரவுப்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் செந்தில்குமாரியின் அறிவுரையின் பேரில் திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) லெனின் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் கிருஷ்ணவேணி (திருப்பூர்), திருஞானசம்பந்தம்(தாராபுரம்). திருப்பூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சண்முகவேலு (1-வது வட்டம்), வெங்கடாசலம்(2-ம் வட்டம்), பேச்சிமுத்து (3-ம் வட்டம்), குமாரசாமி(தாராபுரம் பொறுப்பு), இளங்கோவன்(காங்கேயம்) மற்றும் உடுமலை தொழிலாளர் உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு ஆகியோரால் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகைக்கடைகளில் 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

13 கடைகளில் முரண்பாடு

மொத்தம் 37 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 13 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. இந்த முரண்பாடுகள் கண்டறியப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

வணிகர்கள் உபயோகத்தில் வைத்திருக்கும் அனைத்து வகையான எடையளவு கருவிகளையும் உரிய காலத்தில் மறுபரிசீலனை செய்து முத்திரையிட்டு வைத்துக்கொள்ளவேண்டும்.

மேலும், மறுமுத்திரையிடப்பட்டு சான்று காட்டி வைக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story