காடூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் இன்று நடக்கிறது
காடூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் இன்று தாசில்தார் தலைமையில் நடக்கிறது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகாவில் உள்ள தெற்கு காடூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) தாசில்தார் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் அளிக்கும் பட்டா மாறுதல்கள் (உட் பிரிவு இல்லாத இனங்கள்), சிட்டா நகல்கள், ஆதார் அட்டைகள் பெற பதிவுகள் செய்தல், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள், வாரிசுரிமை சான்றிதழ்கள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்கள், முதல் பட்டதாரி அல்லது குடும்பத்தில் பட்டதாரி, துயர்துடைப்பு மற்றும் விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒரே நாளில் தீர்வு காணக்கூடிய இதர மனுக்கள் மீது ஆணைகள் பிறப்பித்தல் ஆகியவை அன்றைய தினமே உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக முகாம் நடை பெறும் இடங்களில் இணையதள இணைப்புடன் கூடிய கணினி வசதி, பிரிண்டர் ஆகிய வசதிகள் செய்யப்பட உள்ளன. முகாமில் பெறப் படும் அனைத்து மனுக்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படுகின்றன. உடனடியாக முடிவு செய்ய இயலாத விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த முகாமில் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story