வி.கைகாட்டி பகுதியில் நுங்கு விற்பனை அமோகம்


வி.கைகாட்டி பகுதியில் நுங்கு விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 11 May 2018 4:19 AM IST (Updated: 11 May 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

வி.கைகாட்டி பகுதியில் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

வி.கைகாட்டி,

கோடை கால வெப்பத்தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள இயற்கை தந்த நன்கொடையில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் சூட்டை தணிக்கும் கோடைகால வெயிலுக்கு அருமருந்தாக திகழும் நுங்கு சீசன் அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் தொடங்கி உள்ளது. வி.கைகாட்டியில் இருந்து அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலையோர நடைபாதைகளிலும், வி.கைகாட்டி ஜங்ஷன் பகுதியில் சாலையோரங்களிலும் குவித்து வைக்கப்பட்டு நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

1 டஜன் ரூ.30-க்கு...

பொதுமக்கள் கோடை வெப்ப தாக்கத்தை சமாளிக்க உடல் சூட்டை தணிக்கும் நுங்கினை அதிகளவில் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், “தற்போது நுங்கு சீசன் ஆரம்பகட்டத்தில் இருப்பதால் 1 டஜன் (12 எண்ணிக்கை) ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நுங்கு வரத்து அதிகரித்தவுடன் விலை நிச்சயம் குறையும்” என்றார். உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர், வெள்ளரி, தர்ப்பூசணி, கம்மங்கூழ், பழச்சாறு, கரும்புசாறு ஆகியவற்றின் விற்பனையும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. வி.கைகாட்டி பகுதியில் 1 இளநீர் ரூ.20-க்கும், 1 சொம்பு கம்மங்கூழ் ரூ.15-க்கும், 1 டம்ளர் கரும்புசாறு ரூ.15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Next Story