திருவாரூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 May 2018 12:48 PM IST (Updated: 11 May 2018 12:48 PM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு வழங்கக்கோரி வங்கி ஊழியர்கள் திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கக்கோரிய ஊழியர்களை 6 மாத காலம் அலைகழித்த பின்னர் தற்போது 2 சதவீதம் ஊதிய உயர்வு மட்டுமே தர முடியும் என்று கூறிய வங்கி நிர்வாகத்தை கண்டித்து திருவாரூரில் அனைத்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர் பனகல் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வங்கி ஊழியர் சங்க கிளை தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் ராஜவேல் முன்னிலை வகித்தார். இதில் அனைத்து வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை விரைந்து முடித்து நியாயமான ஊதிய உயர்வை வழங்க வேண்டும். மக்கள் விரோத வங்கி நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

வங்கிகளை ஏமாற்றுபவர்கள் மீது சட்டப்படி குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வணிக நிறுவன வாரா கடன் சுமையை மற்ற வாடிக்கையாளர் மீது சுமத்த கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப் பட்டன. முடிவில் கிளை செயலாளர் ரங்கநாதன் நன்றி கூறினார். 

Next Story