வித்தியாசமான வெள்ளை ஸ்ட்ராபெர்ரி


வித்தியாசமான வெள்ளை ஸ்ட்ராபெர்ரி
x
தினத்தந்தி 11 May 2018 10:23 AM GMT (Updated: 11 May 2018 10:23 AM GMT)

பெரும்பாலான மக்கள் வெள்ளை ஸ்ட்ராபெர்ரியைப் பார்த்திருக்கவோ, சுவைத்திருக்கவோ வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த வகை ஸ்ட்ராபெர்ரி பழங்கள் ஜப்பான் நாட்டில்தான் கிடைக்கின்றன.

வெள்ளை ஸ்ட்ராபெர்ரி மிக குறைந்த அளவிலேயே விளைவிக்கப்படுகின்றன. அதனால் வெள்ளை ஸ்ட்ராபெர்ரிகளின் சுவையும், அதன் மதிப்பும் அதிகரிக்கிறது. ‘ஒயிட் ஜூவல்’ என புகழப்படும் வெள்ளை ஸ்ட்ராபெர்ரிகளை, யாசுஹிட்டோ டெஷிமா என்பவர் விளைவிக்கிறார். சிவப்பு நிற ஸ்ட்ராபெர்ரியை வெள்ளை நிறத்துக்கு மாற்ற இவருக்கு 3 ஆண்டுகள் தேவைப்பட்டதாம்.

“நிழலிலேயே இவற்றை விளைவிக்கிறேன். கொஞ்சம் சூரிய வெளிச்சம் பட்டாலும் சிவப்பு நிறமாக மாறிவிடும். முதிர்ந்த பிறகு நிறம் மாறுவதில்லை. ‘ஒயிட் ஜூவல்’ ஒன்றின் விலை 650 ரூபாய். பழத்தின் மணத்திலேயே இனிப்புச் சுவை தெரியும். தோல் மெல்லியதாக இருக்கும். முதல் கடியில் அன்னாசிப் பழம் போன்று தோன்றும். ஆனால் சில நொடிகளில் புதிய சுவை கிடைத்துவிடும். ஒன்றை சாப்பிட்டு ருசி பார்த்துவிட்டால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தோன்றும்” என்கிறார் யாசுஹிட்டோ டெஷிமா. 

Next Story