கிணத்துக்கடவு அருகே மொபட் மீது பஸ் மோதி 2 பேர் பரிதாப சாவு
கிணத்துக்கடவு அருகே மொபட் மீது பஸ்மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது33) கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ் என்பவரது மகன் யுவராஜ் (19). அரசு பாலிடெக்னிக் மாணவர். ஆனந்தன் என்பவரது மகன் ராஜேஷ் (17). இவர் கிணத்துக்கடவு அரசுமேல் நிலைப்பள்ளியில் 11-ம்வகுப்பு படித்து வந்தார். இதுபோல் வடபுதூர் கிருஷ்ணசாமிபுரம் பகுதியைசேர்ந்த கிருஷ்ணசாமி (35). இவர்கள் 4 பேரும் நேற்று காலையில் ஒரு மொபட்டில் தாமரைக்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டிட வேலைக்கு சென்றனர்.
பின்னர் மதியம் தாமரைக்குளம் வந்து அங்கு உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் அதே மொபட்டில் 4 பேரும், பொள்ளாச்சி-கோவை ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். மொபட்டை சுந்தர்ராஜ் ஓட்டினார். பின்னால் கிருஷ்ணசாமி, யுவராஜ், ராஜேஷ் இருந்தனர். அப்போது கோவைக்கு சென்ற தனியார் பஸ் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் பஸ்சை ஓட்டிவந்த டிரைவர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வேனில் அனுப்பிவைத்தனர்.
இதில் வழியிலேயே கட்டிடத் தொழிலாளிகள் சுந்தர்ராஜ், கிருஷ்ணசாமி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த கல்லூரி மாணவர் யுவராஜ் பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவ மனையிலும், பள்ளிமாணவர் ராஜேஷ் கோவையில் உள்ள அரசு மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இறந்து போன சுந்தர்ராஜூக்கு ராதாலட்சுமி (22) என்ற மனைவியும் அஸ்வந்த் (3) என்கிற ஒரு ஆண் குழந்தையும், 3மாத பெண்குழந்தையும் உள்ளனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து அதிவேகமாக தனியார்பஸ்சை ஓட்டி விபத்து ஏற்படுத்தி தலைமறைவான பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த முத்துக்குமாரை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Tags :
Next Story