வரத்து அதிகரிப்பால் கட்டுமாவடியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் நண்டுகள்
வரத்து அதிகரிப்பால் கட்டுமாவடியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நண்டுகள் அனுப்பப்பட்டு வருகிறது.
மணமேல்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே கட்டுமாவடியில் நாட்டுப்படகு மீன்பிடிதளம் உள்ளது. விசைப்படகு மீனவர்களுக்கு தடைக்காலம் உள்ளதால் நாட்டுப் படகு மீனவர்கள் மட்டும் கடலில் மீன் பிடித்து வருகின்றனர். குறைந்த அளவிலான நாட்டுப்படகில் பிடிக்கப்படும் மீன்கள் மட்டும் கட்டுமாவடி,மணமேல்குடி மீன் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருவதால் மீன்களின் விலை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தற்போது நாட்டுப்படகு மீனவர்கள் நண்டு வலையுடன் கடலுக்கு செல்வதால் நண்டுகளின் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு நண்டுகள் அதிகமாக விற்பனைக்கு வருகிறது.
மகிழ்ச்சி
இதனை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி அதனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். மருத்துவகுணம் வாய்ந்த இந்த நண்டுகள் வெளிமாநிலங்களில் அதிக விலைக்கு விற்பனையாவதால் உள்ளூர் வியாபாரிகள் ஏராளமாக வாங்கி அனுப்பி வருகின்றனர். மேலும் நண்டுகளின் தேவையும் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு நண்டு வலையுடன் சென்று பிடித்து வருகின்றனர். இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story