செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டித்ததால் பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சி: வாலிபர் கைது
விக்கிரமசிங்கபுரம் அருகே, செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டித்த இளம்பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரமசிங்கபுரம்,
விக்கிரமசிங்கபுரம் அருகே, செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டித்த இளம்பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செல்போனில் பாலியல் தொல்லை
நெல்லை மாவநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த முப்பிடாதி மகன் பார்த்திபன்(வயது30). இவர், அதே ஊரை சேர்ந்த திருமணமான இளம்பெண்ணுக்கு செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்து உள்ளார்.
இதை அந்த பெண் கண்டித்தும், தொடர்ந்து பார்த்திபன் செல்போனில் தொல்லை கொடுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்து உள்ளார். இந்த விஷயம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர், அந்த வாலிபரை கண்டிப்பதற்கு பதிலாக, மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
வெட்டி கொல்ல முயற்சி
ஆனாலும், பார்த்திபன் தொடர்ந்து அந்த பெண்ணின் செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்தார். சம்பவத்தன்று அவர் செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தார். இதை தொடர்ந்து அந்த பெண்ணுக்கும், கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அந்த பெண், கணவரிடம் கோபித்து கொண்டு தனது 2 குழந்தைகளை அழைத்து கொண்டு உள்ளூரில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த பிரச்சினையை அறிந்த அந்த பெண்ணின் தந்தை நேற்று பார்த்திபனை சந்தித்து, ‘எனது மகளின் செல்போனில் தொடர்பு கொண்டு ஏன் அடிக்கடி தொல்லை கொடுக்கிறாய்?. இனிமேல் அதுபோன்று செய்யக்கூடாது என அவர் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன், அரிவாளால் அவரை அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சித்தார்.
வாலிபர் கைது
அவரிடம் இருந்த தப்பிய அந்த பெண்ணின் தந்தை விக்கிரமசிங்கபுரம் போலீசாரிடம் புகார் செய்தார். இது தொடர்பாக அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story