ஆரல்வாய்மொழி உச்சினி மாகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் உச்சினி மாகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி, பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய உச்சினி மாகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 18-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் காலை 6.15 மணிக்கு கணபதி ஹோமம், 8.45 மணிக்கு தீபாராதனை, 10.30 மணிக்கு லட்சுமி பூஜை, பகல் 11.45 மணிக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 4 மணிக்கு கும்பத்தில் புனித நீர் எடுத்து வருதல், 5.30 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள் போன்றவை நடக்கிறது.
19-ந் தேதி காலை 8.45 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜைகள், மதியம் 12 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜைகள், மாலை 5.30 மணிக்கு தீபாராதனை, இரவு 9.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெறும்.
கும்பாபிஷேகம்
20-ந் தேதி காலை 7 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜைகள், 8.45 மணிக்கு தீபாராதனை, 9.30 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 10 மணிக்கு உச்சினி மாகாளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், தொடர்ந்து மகா அபிஷேகம், 11 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மதியம் அன்னதானம் போன்றவை நடக்கிறது. கும்பாபிஷேகம் மற்றும் பூஜைகளை ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மேல்சாந்தி பால சுப்பிரமணிய சிவாச்சாரியார் நடத்துகிறார்.
திருவிழா ஏற்பாடுகளை ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாயம் மற்றும் அறக்கட்டளை தலைவர் சண்முக பெருமாள் மற்றும் நிர்வாகிகள், நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story