மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே மண் சரிந்து விழுந்து தொழிலாளி சாவு + "||" + The fall of the soil is the worker's death

திருவள்ளூர் அருகே மண் சரிந்து விழுந்து தொழிலாளி சாவு

திருவள்ளூர் அருகே
மண் சரிந்து விழுந்து தொழிலாளி சாவு
திருவள்ளூர் அருகே மண் சரிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த புங்கத்தூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப் (வயது 43). கூலித்தொழிலாளி. இவருக்கு மஞ்சுளா(33) என்கிற மனைவியும், சரத்குமார் என்ற மகனும் சரண்யா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஜோசப் புங்கத்தூர் பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றார்.

வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது வீட்டில் உள்ளவர்கள் அவரை தேடிக்கொண்டு ஏரிக்கு சென்றார்கள். அந்த ஏரியில் உள்ள பள்ளத்தில் சரிந்து விழுந்த மண்ணில் புதைந்திருப்பது தெரியவந்தது.

சாவு

இதையடுத்து அவர்கள் ஜோசப்பை மீட்கும் பணியில் ஈடுபட்டார்கள். இதுகுறித்து திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண்ணை எடுத்து விட்டு ஜோசப்பை வெளியே எடுத்தனர். அதற்குள் அவர் இறந்து விட்டார்.

இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோசப்பின் உடலை பிரேத பரிசோதனைக் காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.