திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி
காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது.
கல்பாக்கம்,
திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஜமாபந்தி தொடங்கியது. இதற்கு தாசில்தார் வரதராஜன் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆறுமுகம், சமூக நல பாதுகாப்பு தனி தாசில்தார் சரவணன் வட்ட வழங்கல் அலுவலர் தேவி, துணை தாசில்தார் சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம் எடுப்பு) சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், புதிய ரேஷன்கார்டு உள்பட 131 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இதில் 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story