குமாரசாமி முதல்-மந்திரி ஆவதை யாராலும் தடுக்க முடியாது காங்கிரஸ் - பா.ஜனதாவுக்கு ஜனதாதளம்(எஸ்) மீது பயம்
குமாரசாமி முதல்-மந்திரி ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவினருக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சி மீது பயம் வந்துள்ளது என்றும் டி.ஏ.ஷரவணா எம்.எல்.சி. கூறினார்.
பெங்களூரு,
குமாரசாமி முதல்-மந்திரி ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவினருக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சி மீது பயம் வந்துள்ளது என்றும் டி.ஏ.ஷரவணா எம்.எல்.சி. கூறினார்.
முதல்-மந்திரியாக குமாரசாமி
ஜனதா தளம்(எஸ்) கட்சியின் பொதுச்செயலாளரும், மேல்-சபை உறுப்பினருமான டி.ஏ.ஷரவணா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரசுக்கும், பா.ஜனதாகவுக்கும் ஜனதா தளம்(எஸ்) கட்சியைப் பார்த்து பயம் வந்துள்ளது. அதனால்தான் 2 கட்சியினரும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு எதிராக பேசி வருகிறார்கள். அவர்களுக்கு இந்த பயமே போதும். மாநிலத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் சக்தி என்ன என்பதை அவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள்.
மே 18-ந் தேதி முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்பார். அதை யாராலும் தடுக்க முடியாது. மற்ற இரு கட்சிகளின் கனவு பலிக்காது.
115 இடங்களில்...
தற்போது கர்நாடக பொலிடிக்கல் லீக்கின் (கே.பி.எல்.) இறுதி ஆட்டம் நடக்கிறது. இந்த முறை கோப்பை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்குத்தான். ஜனதாதளம்(எஸ்) சொந்த பலத்தில் ஆட்சி அமைக்கும். யாருடனும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வேண்டிய அவசியம் இருக்காது. காங்கிரசார் பா.ஜனதாவினரையும், பா.ஜனதாவினர் காங்கிரசாரையும் ஊழல்வாதிகள் என்று கூறுகிறார்கள்.
ஆனால் அவர்கள் கொள்ளையடித்தது 6 கோடி மக்களின் பணத்தை. இது மக்களுக்கு தெரிந்து விட்டது. அதனால் இந்த முறை ஊழல் இல்லாத ஆட்சி மலர ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆதரிக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள். தலித் மக்களின் ஓட்டுகள், தெலுங்கரின் ஓட்டுகள், ஆசாத்தின் ஓவைசியின் ஆதரவு மற்றும் முஸ்லிம் மக்களின் ஓட்டுகள் ஜனதா தளம்(எஸ்) கட்சியிடம் இருப்பதால் இம்முறை ஜனதா தளம்(எஸ்) கட்சி 115 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும்.
இவ்வாறு டி.ஏ.ஷரவணா எம்.எல்.சி. கூறினார்.
Related Tags :
Next Story