மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் பட்டதாரிகள் அணி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் + "||" + Congress Graduates Training Camp for Team Administrators

காங்கிரஸ் பட்டதாரிகள் அணி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்

காங்கிரஸ் பட்டதாரிகள் அணி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்
காங்கிரஸ் கட்சியின் பட்டதாரிகள் அணி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் திருச்சி வயலூரில் நடைபெற்றது.
திருச்சி, 

காங்கிரஸ் கட்சியின் பட்டதாரிகள் அணி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் திருச்சி வயலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை 2 நாட்கள் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி பட்டதாரிகள் அணி மாநில தலைவர் கலைப்புனிதன் தொடக்கவுரையாற்றினார். திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வன், ஊடகப்பிரிவு வேலுச்சாமி, மகளிர் அணி மாநில செயலாளர் ஜெகதீஷ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பயிற்சி முகாமில் “பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி”, “ராஜீவ்காந்தியின் மக்கள் நலத்திட்டங்கள்”, “கிராம வளர்ச்சியில் காங்கிரசின் பங்கு” உள்பட பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள். இதில் பட்டதாரிகள் அணி நிர்வாகிகள் பாலதண்டாயுதபாணி, சுரேஷ்பாபு, மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

அதிகம் வாசிக்கப்பட்டவை