போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் மர்மச்சாவில் திருப்பம் தோழியின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றவர் கொலை


போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் மர்மச்சாவில் திருப்பம் தோழியின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றவர் கொலை
x
தினத்தந்தி 11 May 2018 11:00 PM GMT (Updated: 11 May 2018 10:39 PM GMT)

போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் மர்மச்சாவில் திருப்பமாக தோழியின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மும்பை, 

போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் மர்மச்சாவில் திருப்பமாக தோழியின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக இளம்பெண்கள் உள்பட 12 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இன்ஸ்பெக்டர் மகன் சாவு

மும்ைப காந்திவிலி தாக்குர் காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் நரேந்திர ஷிண்டே. மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அதர்வா ஷிண்டே (வயது20). கடந்த 9-ந் தேதி இவர் ஆரேகாலனி திரைப்பட நகர் அருகே புதருக்குள் பிணமாக கிடந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

12 பேரிடம் விசாரணை

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், சம்பவத்தன்று அதர்வா ஷிண்டே ஆரேகாலனியில் நடந்த பெண் தோழி ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிறந்தநாள் கொண்டாடிய இளம்பெண் மற்றும் அவரது தோழிகள், நண்பர்கள் என 12 பேரை பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிறந்தநாள் விழாவின் போது அனைவரும் போதைப்பொருள் மற்றும் மதுவை அதிகளவில் குடித்து ஆட்டம் போட்டது தெரியவந்தது.

சிலர் போதையின் காரணமாக தங்களுக்கு எதுவுமே தெரியாது என தெரிவித்து உள்ளனர். இருப்பினும் தொடர்ந்து 12 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே அங்கு சம்பவத்தன்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் பார்வையிட்டனர். அதில், போதையில் தள்ளாடியபடி சாலையில் வரும் அதர்வா ஷிண்டே ஒரு ஆட்டோ பிடித்து செல்கிறார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் ஏறிய இடத்திலேேய ஆட்டோ டிரைவர் அவரை இறக்கி விட்டு விட்டு செல்கிறார்.

பின்னர் பிறந்தநாள் விழா நடந்த பங்களா வீட்டு வளாகத்துக்குள் சுவர் ஏறி இறங்கும் அதர்வா ஷிண்டே அதிகளவில் வாந்தி எடுக்கிறார்.

பின்னர் அருகில் உள்ள குளத்தை நோக்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதன்பின்னர் அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை.

Next Story