மாவட்ட செய்திகள்

நாகையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Agricultural union demonstration in Nagai

நாகையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் சரபோஜி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாண்டியன் பேசினார்.


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், 2016-2017-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்காத காப்பீட்டு நிறுவனத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் தமிழ்நாடு விவசாய சங்கத்தை சேர்ந்த மதன், ராமலிங்கம், சசி ரேகா, மல்லிகா, சரோஜினி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவிலில் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகம் சார்பில் நாகர்கோவில் வடசேரி ஆம்னி பஸ் நிலையம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
2. கிருஷ்ணகிரியில் அய்யப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்
அய்யப்ப பக்தர்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு நேற்று நடந்தது.
3. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. பொதுபணியிட மாறுதல் வழங்கக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொதுபணியிட மாறுதல் வழங்கக்கோரி தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரே‌ஷன்கடை பணியாளர்கள் 2–வது நாளாக ஆர்ப்பாட்டம்
30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ரே‌ஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில் 2–வது நாளாக தஞ்சையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.