ஊட்டியில் 24-ந் தேதி நடக்கிறது முன்னாள் படைவீரர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம்


ஊட்டியில் 24-ந் தேதி நடக்கிறது முன்னாள் படைவீரர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 12 May 2018 4:13 PM IST (Updated: 12 May 2018 4:13 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி மதியம் 12 மணிக்கு ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை இரட்டை பிரதிகளில் மனுக்களாக தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story