மாவட்ட செய்திகள்

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் + "||" + The Hindu Frontiers demonstrated

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட இந்து முன்னணியினர் பழைய பஸ்நிலைய பகுதியில் காந்திசிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட இந்து முன்னணியினர் பழைய பஸ்நிலைய பகுதியில் காந்திசிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். திருச்சி கோட்ட செயலாளர் திருப்பட்டூர் குணசேகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பொம்மி நாயக்கன்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் இந்துக்கள் சுமார் 350 பேர் வசிக்கின்றனர். அங்கு ஆதிதிராவிட இந்துக்கள் பொதுப்பாதையில் இறுதி ஊர்வலம் செல்வதற்கு தடை ஏற்படுத்துவதை கண்டித்தும், முஸ்லிம்களாக கட்டாய மதம் மாற்றம் செய்துகொள்ளவேண்டும் என்று கூறுவதை கண்டித்தும், அதற்கு உடன்படாத ஆதிதிராவிட இந்துக்கள் கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், நகர பொதுச்செயலாளர் கண்ணன் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் கஜேந்திரன் நன்றி கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்-ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்-ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
4. சம்பள உயர்வு கோரி ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சம்பள உயர்வு கோரி ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
5. சிறுபான்மை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே தேசிய சிறுபான்மையினர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.