நெல்லை மாவட்ட கிராமங்களில் ஜான் பாண்டியன் மக்கள் சந்திப்பு பயணம்


நெல்லை மாவட்ட கிராமங்களில் ஜான் பாண்டியன் மக்கள் சந்திப்பு பயணம்
x
தினத்தந்தி 12 May 2018 8:45 PM GMT (Updated: 12 May 2018 7:50 PM GMT)

தஞ்சையில் வருகிற ஜூலை மாதம் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநாடு நடைபெற இருப்பதையொட்டி, அக்கட்சியின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் நெல்லை மாவட்ட கிராமங்களில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார்.

நெல்லை, 

தஞ்சையில் வருகிற ஜூலை மாதம் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநாடு நடைபெற இருப்பதையொட்டி, அக்கட்சியின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் நெல்லை மாவட்ட கிராமங்களில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார்.

மாநாடு

தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில மாநாடு தஞ்சையில் வருகிற ஜூலை மாதம் 15-ந்தேதி நடைபெறு கிறது. இதையொட்டியும், தேவேந்திர குல வேளாளர் களை, ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து வெளியேற்றி வேளாண் மரபினராக அறிவிக்க கோரி கட்சியின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

நெல்லை மாவட்டத்தில் நேற்று பயணத்தை தொடங்கி னார். மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத் தில் கட்சி கொடியேற்றி பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தேவேந்திர குல வேளாளர் இன மக்களை எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்கி, வேளாண் மரபினராக அறிவிக்க வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சமுதாய மக்களை சந்தித்து பேசி வருகிறோம். ஏற்கனவே தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் முடிந்து விட்டது. இதே போல் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்ள இருக்கிறோம்” என்றார்.

கிராமங்களில்...

இதை தொடர்ந்து ஜான் பாண்டியன், வி.எம்.சத்திரம், ராஜகோபாலபுரம், கக்கன் நகர், பொட்டல், படப்பைக் குறிச்சி, பெரியபாளையம், ராஜா குடியிருப்பு, வெள்ளக் கோவில், மூளிக்குளம், வண்ணார்பேட்டை இளஞ்கோநகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீசுவரம், சேந்தி மங்கலம் மற்றும் கட்டுடையார் குடியிருப்பு ஆகிய கிராமங்களு க்கு சென்று மக்கள் மத்தியில் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில துணை பொது செயலாளர் நெல்லையப்பன், மாநில செய்தி தொடர்பாளர் சண்முகசுதாகர், நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், தென் மண்டல செயலாளர் அழகிரிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இன்றைய பயணம்

இன்றும் (ஞாயிற்றுக் கிழமை) இந்த பயணம் நடைபெறுகிறது. இன்று மாலை 4 மணிக்கு பாளையங் கோட்டை ஜோதி புரம் திடலில் தொடங்கு கிறது.

அதை தொடர்ந்து வீரமாணிக்கபுரம், கருங்குளம், நடராஜபுரம், சிவராஜபுரம், நாகம்மாள்புரம், அழகிரிபுரம், கொக்கிரகுளம், குருந்துடை யார்புரம், வீரராகவபுரம், நத்தம், ஊருடையான் குடியிருப்பு, நம்பிராஜபுரம், ஆனந்தபுரம், ரெங்கநாதபுரம், பாறையடி, கோட்டையடி, கண்டியப்பேரி, தேனீர்குளம், ராமையன்பட்டி மற்றும் சத்திரம்புதுக்குளம் ஆகிய ஊர்களுக்கு ஜான்பாண்டியன் சென்று பேசுகிறார்.

Next Story