மாவட்ட செய்திகள்

108 ஆம்புலன்ஸ் தகவல் குறிப்புகளை வெளியிட்டு பொதுமக்களுக்கு சாலை விதிகள், முதலுதவி குறித்த விளக்கம் + "||" + Explanation of road rules and first aid for the public

108 ஆம்புலன்ஸ் தகவல் குறிப்புகளை வெளியிட்டு பொதுமக்களுக்கு சாலை விதிகள், முதலுதவி குறித்த விளக்கம்

108 ஆம்புலன்ஸ் தகவல் குறிப்புகளை வெளியிட்டு பொதுமக்களுக்கு சாலை விதிகள், முதலுதவி குறித்த விளக்கம்
திருமங்கலத்தில் 108 ஆம்புலன்சின் தகவல் குறிப்புகளை வெளியிட்டு, பொதுமக்கள், மாணவர்களுக்கு சாலை விதிகள், முதலுதவி பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.
திருமங்கலம்,

திருமங்கலம் சமத்துவபுரம் அருகில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி சார்பில் 108 ஆம்புலன்சின் தகவல் குறிப்புகளை வெளியிட்டு சாலை விதிகள், முதலுதவி குறித்த விளக்கத்தை பொதுமக்கள், மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ணலதா தலைமை தாங்கினார்.


நிகழ்ச்சியில் ஆம்புலன்சின் சேவைகள் பற்றியும், அவற்றின் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்கி பேசினார்.

தொடர்ந்து விபத்தில், ஆபத்தில் இருப்பவர்களுக்கு எப்படி முதலுதவி அளிப்பது என்பது குறித்து நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது. குறிப்பாக மாணவர்கள், சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் மூலம் விபத்துக்கள் தடுக்கப்படும் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், வாசகன் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி முதல்வர்கள் சசி, முரளிதரன், சீனித் துரை, வீரேஸ்வரன், சபரிமலை உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கான சாலை விழிப்புணர்வு முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி முகாம் மாதந்தோறும் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. சாலை விதிகளை மீறிய 1,647 பேர் மீது வழக்கு - ரூ.2 லட்சம் அபராதம் வசூல்
போளூர் உட்கோட்டத்தில் சாலை விதிகளை மீறிய 1,647 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.2 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.