நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 May 2018 10:30 PM GMT (Updated: 12 May 2018 8:05 PM GMT)

நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நல்லூர்,

திருப்பூர் நல்லூரை அடுத்த காசிபாளையத்தில் இருந்து சிட்கோ செல்லும் வழியில் உள்ள பொதுசுத்திகரிப்பு நிலையம் எதிரே உள்ள தடுப்பணையில் இருந்து மதகு வழியாக நொய்யல் ஆற்று நீர் செல்கிறது. இந்த ஆற்று நீர் தற்போது நுரையுடன் தினமும் அப்பகுதியில் சென்று கொண்டிருக்கிறது.

மேலும், கோவை, திருப்பூர் பகுதிகளில் மழை பெய்தால் நொய்யல் ஆற்றில் நுரையின் ஆதிக்கம் அதிகமாகி விடும். காற்றில் நுரை பறந்தும், அப்பகுதிகள் வெண்மையாக காட்சியளிப்பதும் வாடிக்கையாகி விட்டது. நுரை ஏற்பட மறைமுகமாக சாயக்கழிவுநீர் மறைமுகமாக கலப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வை தீவிரப்படுத்த வேண்டும். சாயக்கழிவுநீர் கலப்பதால் நுரை ஏற்படுகிறதா? அல்லது வேறு தொழிற்சாலைகளில் இருந்து நுரை வருகிறதா? என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டறிய வேண்டும். இது குறித்து அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதை தடுக்க நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இதனை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story