நெல்லை டவுனில் கோடைக்கால உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்
நெல்லை டவுனில் அமைக்கப்பட்டுள்ள கோடைக்கால உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.
நெல்லை,
நெல்லை டவுனில் அமைக்கப்பட்டுள்ள கோடைக்கால உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.
விழிப்புணர்வு கண்காட்சி
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு உணவு பாதுகாப்பு துறையின் மூலம் கோடைக்கால உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சிஅமைக்கப்பட்டு உள்ளது. இதில் கலப்படம் செய்யப்பட்ட உணவு பொருட்கள் எப்படி இருக்கும், கலப்படம் இல்லாத பொருட்கள் எப்படி இருக்கும் என்பது உள்ளிட்ட விளக்கம் மற்றும் பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சி திறப்பு விழா நேற்று காலையில் நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். விஜிலாசத்யானந்த் எம்.பி. முன்னிலை வகித்தார்.
அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் கோடைக் காலத்தில் உடல் பாதுகாப்பு மற்றும் உணவு பாதுகாப்பு சமந்தமாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சத்தான உணவு
தமிழகத்தில் நடைபெறுகின்ற நல்லாட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் சென்னையில் கோடைக்கால விழிப்புணர்வு கண்காட்சியினை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நமது மாவட்டத்தில் பொதுமக்கள் எளிய முறையில் கலப்படத்தை கண்டறியும் விரைவு சோதனைமுறைகள் மற்றும் பாதுகாப்பான சத்தான உணவு குழந்தைகளுக்கான பாதுகாப்பான உணவு, பொட்டலமிடப்பட்ட பொருட்களின் விபரங்களை சரிபார்த்து உறுதிபடுத்தி கொள்ளுதல் போன்ற விழிப்புணர்வு கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி வருகிற 31–ந்தேதி வரை நடைபெறுகிறது.
மேலும் சாலையோர உணவகங்கள் பொட்டலமிடப்பட்ட உணவு பொருட்கள் கோடை காலங்களில் அதிகளவில் விற்பனையாகும் குளிபானங்கள் மற்றும் ஐஸ் கீரிம் போன்றவற்றில் என்ன கவனிக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதகைகளையும் காய்கறிகடைகள், சில்லறை வணிகம் புரிவோர் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் அடங்கிய பதகைகளை திறந்து வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் பதிவு சான்றிதழ் பெறப்பட்ட கடைகளில் மட்டுமே பழம், பழச்சாறு மற்றும் உணவு பொருட்களை வாங்க வேண்டும்.
பழங்கள், இயற்கையான பழச்சாறு, இளநீர், மோர், நுங்கு, நீர் சத்து நிறைந்த வெள்ளரிக்காய் போன்றவைகளை உட்கொள்ள வேண்டும். ராசயன நிறம், சுவையூட்டிகள், ஐஸ்கட்டிகள் கலந்த பழச்சாறுகளையும், குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும். செயற்கையாக கல்வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் தோளின் நிறம் மட்டும் சீராக பழுத்த மாதிரியும் உள்ளே காயாகவும், பழங்களின் வாசம் மற்றும் சுவை இல்லமாலும் இருக்கும். இவைகளை பொதுமக்கள் வாங்கி உண்ணக் கூடாது.
மாணவ–மாணவிகளுக்கு
மேலும் கோடைக்காலங்களில் உடல் பாதுகாப்பிற்காக வெயிலில் செல்லும் போது குடை அல்லது தொப்பி பயன்படுத்தவும், பருத்தி ஆடைகளை அணியவும், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ¼ லிட்டர் வீதம் தண்ணீர் பருகுவது கோடைகாலங்களில் மக்கள் உடல்நிலை பாதுகாப்பிற்கு உகந்ததாகும். பாதுகாப்பான உணவு முறையை நாம் கடைபிடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்.
ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் படிக்கின்ற மாணவ–மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்சியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் செந்தில்குமார், மாநகர நல அலுவலர் டாக்டர் பொற்செல்வன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், நெல்லை மாநகர் மாவட்ட அவைதலைவர் பரணிசங்கரலிங்கம், பொருளாளர் தச்சைகணேசராஜா, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் மண்டல தலைவர் மோகன், ஆவின் ரமேஷ், சிறுபான்மைபிரிவு செயலாளர் மகபூப்ஜான், சூப்பர்மார்க்கெட் தலைவர் பல்லிகோட்டை செல்லத்துரை, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் காளிமுத்து, சங்கரலிங்கம், முத்துகுமார், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் எம்.ஆர்.சுப்பிரமணியன், பன்னீர்செல்வம், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story