மாவட்ட செய்திகள்

அரூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை; வாழை மரங்கள் முறிந்து விழுந்தன + "||" + Hurricane wind in Arur area; Banana trees fell off

அரூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை; வாழை மரங்கள் முறிந்து விழுந்தன

அரூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை; வாழை மரங்கள் முறிந்து விழுந்தன
அரூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
அரூர்,

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அரூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும் வீடுகளின் மேற்கூரைகள், தகர அட்டை சூறாவளி காற்றுக்கு பறந்தன. சாலையோரங்களில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர தட்டிகள், போர்டுகள் சேதமடைந்தன.


அரூர் பகுதியில் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இந்த சூறாவளி காற்றுக்கு கூக்கடப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவருடைய தோட்டத்தில் 1½ ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த 400–க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன.

அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்ததை கண்டு சிவக்குமார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அவர் தகவல் தெரிவித்தார். சூறாவளி காற்றுக்கு சேதமடைந்த வாழை மரங்கள் மற்றும் வீடுகளை வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கன மழை 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது
நாகர்கோவிலில் நேற்று காலையில் இடி மின்னலுடன் 3 மணி நேரம் கனமழை பெய்தது.
2. திருப்பூரில் பலத்த காற்றுடன் மழை: மின்கம்பிகள் அறுந்து விழுந்தன
திருப்பூரில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.
3. மழைக்காலங்களில் வீணாக செல்லும் உபரிநீரை ஏரி, குளங்களில் சேகரிக்க கோரி ஆர்ப்பாட்டம் - கொ.ம.தே.க.
மழைக்காலங்களில் வீணாக செல்லும் உபரிநீரை ஏரி, குளங்களில் சேகரிக்க கோரி கொ.ம.தே.க. சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. ராஜாக்கமங்கலம் அருகே பலத்த மழை: வீடு இடிந்து மூதாட்டி சாவு
ராஜாக்கமங்கலம் அருகே பலத்த மழைக்கு வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலியானார்.
5. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

அதிகம் வாசிக்கப்பட்டவை