6 ஆண்டுகளுக்கு பிறகு திண்டுக்கல்லில் ஆலங்கட்டி மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
திண்டுக்கலில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில் மாலை 4.30 மணி அளவில் வானில் கார்மேக்கூட்டங்கள் திரண் டன. இதையடுத்து பலத்த காற்று வீச தொடங்கியது. பின்னர் 5.15 மணிக்கு சூறா வளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
திண்டுக்கல் நகரை பொறுத்தவரை கடந்த 2012-ம் ஆண்டு தான் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தான் திண்டுக்கல் நகர் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சிறுவர்- சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் ஆலங்கட்டிகளை கைகளில் எடுத்து பார்த்து மகிழ்ந்தனர். இந்த மழை சுமார் 45 நிமிடம் பெய்தது.
சூறாவளி காற்று வீசியதால் திண்டுக்கல் ரங்கநாயகி 1-வது தெரு பகுதியில் சாலை யோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதில் கார் சேதம் அடைந்தது. அதேபோல, தனியார் பஸ் ஒன்று சாலை ரோட்டில் வந்து கொண்டி ருந்தது. அப்போது, அருகில் ஒரு கடையில் அமைக்கப்பட்டு இருந்த தகரத்தால் ஆன மேற்கூரை காற்றில் பறந்து வந்து பஸ் மீது விழுந்ததால், பஸ்சின் கண்ணாடி உடைந் தது. பால கிருஷ்ணா புரத்தில் திருச்சி செல்லும் ரெயில் பாதையில் உள்ள ரெயில்வே கேட், பலத்த காற்றுக்கு சாய்ந்து அந்த வழியாக சென்ற மின்சார வயர் மீது உரசியபடி நின்றது. இதையடுத்து விரைந்து வந்த ரெயில்வே மற்றும் மின் வாரிய ஊழி யர்கள் மின் சாரத்தை நிறுத்தி, ரெயில்வே கேட்டை உடனடியாக சரி செய்தனர்.
மேலும் திண்டுக்கல் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தத்தின் மேற்கூரையும் சரிந்து விழுந்தது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பல மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் சேதமடைந்தன. இதேபோல திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே மற்றும் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டு பொது மக்கள் அவதியடைந்தனர்.
கொடைக்கானலில் மதியம் 12 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் நகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. அதனை தொடர்ந்து விட்டு விட்டு சாரல் மழையும் பெய்து கொண்டிருந்தது. பின்னர் மாலை 4 மணி முதல் 6 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி யில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
கொடைக்கானல்-பழனி சாலையில் உள்ள சவரிக்காடு பகுதியில், பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. எனவே சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அப்பகுதியை சேர்ந்த மலை வாழ் மக்களுடன் சேர்ந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத் தினர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
கொடைரோடு பகுதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பலத்த மழை பெய்தது. அதேபோல வத்தலக்குண்டு, நிலக்கோட்டை பகுதிகளில் மாலை 4.30 மணி அளவில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.
Related Tags :
Next Story