மாவட்ட செய்திகள்

நூலக ஏரி + "||" + Library Lake

நூலக ஏரி

நூலக ஏரி
ஏரி மீது அமைந்திருக்கும் வித்தியாசமான நூலகம், குல்ஷன். ஆரம்பத்தில் இது புத்தக கடையாகத்தான் இருந்திருக்கிறது.
படகில் ஏறி சவாரி சென்று ஏரியினுள் அமைந்திருக்கும் இந்த புத்தக கடைக்கு செல்ல சுற்றுலாப்பயணிகள் காட்டிய ஆர்வம் அதனை பிரபலப்படுத்தி விட்டது. அமைதி தவழும் ஏரியினுள் அமர்ந்து புத்தகங்கள் படிப்பதற்கு வசதியாக அதனை நூலகமாகவும் மாற்றிவிட்டார்கள். இங்கு 80 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் ஆசுவாசமாக அமர்ந்து படிப்பதற்கு ஏதுவாக காபி ஷாப் ஒன்றும் அங்கு இயங்கிக்கொண்டிருக்கிறது.


இது ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள டால் ஏரியின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. ‘ஏரியினுள் அமைந்திருக்கும் ஒரே புத்தக கடை-நூலகம்’ என்ற பெருமையுடன் லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. இங்கு செல்வதற்காக இலவச படகு சவாரி உள்ளது.

அதனால் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர்வாசிகளும் ஆர்வமாக சென்று ஏரிக்குள் ஆசுவாசமாக அமர்ந்து விரும்பிய புத்தகங்களை ரசித்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த புத்தக கடையை ஷேக் அஜாஷ் குடும்பத்தினர் 90 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள்.

‘‘எனது மூதாதையர்களுக்கும், புத்தகங்களுக்குமான பந்தம் நீண்ட பாரம்பரியம் கொண்டது. அதை காப்பதில் நான் பெருமைப்படுகிறேன். மக்கள் தரும் ஆதரவு எங்களை உற்சாகத்துடன் செயல்பட வைக்கிறது’’ என்கிறார்.