மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் நடப்பது பா.ஜ.க. கிளை ஆட்சி டி.டி.வி. தினகரன் பேட்டி + "||" + The BJP's rule in Tamil Nadu is happening

தமிழகத்தில் நடப்பது பா.ஜ.க. கிளை ஆட்சி டி.டி.வி. தினகரன் பேட்டி

தமிழகத்தில் நடப்பது பா.ஜ.க. கிளை ஆட்சி டி.டி.வி. தினகரன் பேட்டி
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரையில் பேட்டி அளித்தார்.

மதுரை,

தமிழர்களின் கலாசாரத்தை உலகமெங்கும் பரப்பிய பெருமை நகரத்தாருக்கும் உண்டு. அந்த சமுதாய பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது கண்டிக்கத்தக்கது. கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளும் கட்சியினருக்கு துணையாக அதிகாரிகள் செயல்படுகின்றனர். எதிர்க்கட்சிகளின் வேட்பு மனுவை கூட ஏற்க மறுத்து தள்ளுபடி செய்கின்றனர். எங்கள் கட்சியினர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அதிகாரிகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். எடப்பாடி பழனிசாமி அரசு மாறி, எங்களது ஆட்சி அமைந்தவுடன் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காது, கைதும் செய்யாது. தமிழகத்தில் தற்போது நடைபெறுவது பா.ஜ.க.வின் கிளை ஆட்சி தான்.

இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா., காங்கிரசார் ‘அரசியல் ஆதாயம் தேட சபரிமலையில் தகராறு செய்கிறார்கள்’ ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
பா.ஜனதா, காங்கிரசார் அரசியல் ஆதாயம் தேட சபரிமலையில் தகராறு செய்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர். ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
2. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை - சிவசேனா திட்டவட்டம்
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
3. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, அ.தி.மு.க. கட்சிகள் டெபாசிட் இழக்கும் - தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் பேட்டி
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கட்சிகள் டெபாசிட் இழக்கும் என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தெரிவித்தார்.
4. பா.ஜ.க.வை தவிர்த்து யாரும் அரசியல் நடத்த முடியாது - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
பா.ஜ.க.வை தவிர்த்து யாரும் அரசியல் நடத்த முடியாது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
5. தமிழக அரசு மக்களை பற்றி சிந்திப்பது இல்லை - பா.ஜனதா இளைஞரணி மாநில தலைவர் பேட்டி
தமிழக அரசு மக்களை பற்றி சிந்திப்பது இல்லை என்று பா.ஜனதா இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் பேட்டி அளித்தார்.