மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்உப்பள தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு + "||" + Tuticorin For saline workers Wage hike

தூத்துக்குடியில்உப்பள தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு

தூத்துக்குடியில்உப்பள தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு
தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பேச்சுவார்த்தை

தூத்துக்குடியில் பணியாற்றி வரும் உப்பள தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் காலாவதியானது. இதனைத் தொடர்ந்து புதிய சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தை உப்பள முதலாளிகள், தொழிற்சங்கங்கள் இடையே நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையில், சி.ஐ.டி.யு. உப்பு தொழிலாளர் சங்க தலைவர் பொன்ராஜ், செயலாளர் ஞானதுரை, பொருளாளர் மணவாளன், உதவித் தலைவர் சங்கரன், ஐ.என்.டி.யு.சி. ராஜ், அ.தி.மு.க. குருசாமி, அருணாசலம், உப்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஏசுதாசன், உப்பு தொழிலாளர் ஐக்கிய சங்கம் பாக்கியராஜ், உப்பு உற்பத்தி மற்றும் வியாபாரிகள் சங்கம் திலீபன், ராமச்சந்திரன், தன்பாடு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கிரகதுரை, செயலாளர் தனபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒப்பந்தம்

இதில், நாள் ஒன்றுக்கு ஆண் தொழிலாளிக்கு ரூ.340-ம், பெண் தொழிலாளிக்கு ரூ.330-ம் சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு சம்பளத்தை விட இது ரூ.50 அதிகம் ஆகும். மேலும் தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டு கணக்கு முடிக்கும் நிலையில் ஆண்டுக்கு 7 நாட்கள் சம்பளம் வழங்கவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதி செய்து கொடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வருகிற ஆகஸ்டு மாதத்துக்குள் பேசி முடிவு செய்வது என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் 30-4-18 முதல் அமலுக்கு வந்தது. தொடர்ந்து 30-4-2020 வரை ஒப்பந்தம் அமலில் இருக்கும். இந்த தகவலை சி.ஐ.டி.யு. உப்பு தொழிலாளர் சங்க தலைவர் பொன்ராஜ் தெரிவித்து உள்ளார்.