தூத்துக்குடிக்கு 17-ந் தேதி கமல்ஹாசன் வருகை: மக்கள் நீதி மய்யத்தினர் வெற்றிலை பாக்கு வைத்து மக்களுக்கு அழைப்பு

தூத்துக்குடிக்கு 17-ந் தேதி கமல்ஹாசன் வருகை: மக்கள் நீதி மய்யத்தினர் வெற்றிலை பாக்கு வைத்து மக்களுக்கு அழைப்பு
x
தினத்தந்தி 14 May 2018 2:45 AM IST (Updated: 14 May 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ள கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெற்றிலை பாக்கு வைத்து பொதுமக்களுக்கு மக்கள் நீதி மய்யத்தினர் அழைப்பு விடுத்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ள கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெற்றிலை பாக்கு வைத்து பொதுமக்களுக்கு மக்கள் நீதி மய்யத்தினர் அழைப்பு விடுத்தனர்.

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வருகிற 17-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை சந்திக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மக்கள் திரளாக கலந்து கொள்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அழைப்பு

அதன்படி மக்கள் நீதி மய்யம் உறுப்பினர் ராஜா தலைமையில் கட்சியினர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்துக்கு வந்தனர்.

அவர்கள் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, சாக்லேட் மற்றும் நிகழ்ச்சிக்கான அழைப்பு நோட்டீசு ஆகியவற்றை வைத்து எடுத்து வந்தனர்.

அவர்கள் பஸ் நிலையத்தில் நின்றவர்களிடம் வெற்றிலை, பாக்கு மற்றும் நோட்டீசு கொடுத்து, வருகிற 17-ந்தேதி தூத்துக்குடியில் நடக்கும் கமல்ஹாசன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர்.

நிகழ்ச்சியில், மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் சந்தானம், கமல் நியூட்டன், மணிகண்டன், சங்கர், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story