மாவட்ட செய்திகள்

குடியாத்தம் பகுதியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு + "||" + Examine school vehicles in Gudiyatham area

குடியாத்தம் பகுதியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குடியாத்தம் பகுதியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
குடியாத்தம் பகுதியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 10 வாகனங்கள் குறைபாடு இருந்ததால் திருப்பி அனுப்பப்பட்டது.
குடியாத்தம்,

குடியாத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யுமாறு கலெக்டர் எஸ்.ஏ.ராமன், போக்குவரத்து துணை ஆணையர் பொன்.செந்தில்நாதன், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உத்தரவின்பேரில் குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ.விஜயகுமார் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, தாசில்தார் பி.எஸ்.கோபி, வருவாய் ஆய்வாளர் சிவசங்கரன் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.


குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், பரதராமி, லத்தேரி, பள்ளிகொண்டா, மேல்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 42 பள்ளிகளின் 110 வாகனங்களில் ஆவணங்களை சரிபார்த்தனர். பாதுகாப்பு அம்சங்கள், அவசரகால வழி, வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து தகுதி சான்றிதழ் அளித்தனர்.

அப்போது தீத்தடுப்பு கருவிகளை எவ்வாறு இயக்குவது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதில் 10 வாகனங்களில் குறைபாடுகள் இருந்ததால் அதனை சரிசெய்து மீண்டும் சோதனைக்கு கொண்டுவர திருப்பி அனுப்பினர்.

மேலும் பள்ளி வாகன டிரைவர்களிடம் பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக கொண்டு செல்வது குறித்தும், அந்தந்த நிறுத்தங்களில் வாகனம் நிற்கும்போது மாணவர்களை பாதுகாப்பாக ஏறி, இறங்குவதை உறுதி செய்தபின்பு வாகனத்தை எடுக்க வேண்டும் எனவும், வாகனங்களில் கண்டிப்பாக உதவியாளர் அல்லது நடத்துனர் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் அவர்களுக்கு 5 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. நாகியம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ரோகிணி ஆய்வு
நாகியம்பட்டியில் இன்று நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார்.
2. விஸ்வாசம் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டரில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
விஸ்வாசம் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
3. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் ஆய்வு
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி 16-வது வார்டுக்கு உட்பட்ட பாபு ரோடு, தையல்காரத்தெரு பகுதியிலும் மற்றும் 18, 12-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளிலும் உள்ள ரேஷன்கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
4. தோகைமலை அருகே ராச்சாண்டார் திருமலையில் 17-ந்தேதி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு
தோகைமலைஅருகே உள்ள ராச்சாண்டார் திருமலையில் வருகிற 17-ந்தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
5. 27-ந் தேதி கும்பாபிஷேகம் கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு
கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று திருப்பணிகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.