மாவட்ட செய்திகள்

ஓடும் ரெயிலில் பயணியிடம் பணம் திருடிய 2 பெண்கள் கைது + "||" + Two girls arrested for stealing money

ஓடும் ரெயிலில் பயணியிடம் பணம் திருடிய 2 பெண்கள் கைது

ஓடும் ரெயிலில் பயணியிடம் பணம் திருடிய 2 பெண்கள் கைது
ஜோலார்பேட்டையில் ஓடும் ரெயிலில் பயணியிடம் பணம் திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை,

கர்நாடக மாநிலம் பெங்களூரு யஸ்வந்த்பூர் பகுதியை சேர்ந்தவர் சையத்சாதிக். இவரது மனைவி நையும்முனிசா (வயது 38). இவர் நேற்று காக்கிநாடா - பெங்களூரு நோக்கி செல்லும் காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குடியாத்தம் ரெயில் நிலையத்தில் 2-வது பொது பெட்டியில் ஏறி பெங்களூரு நோக்கி புறப்பட்டார்.

அந்த ரெயில் வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே செல்லும்போது, அதே பெட்டியில் பயணம் செய்த 2 பெண்கள் நையும்முனிசா வைத்திருந்த கை பையை நைசாக திறந்து, அதிலிருந்த பணத்தை திருடினர். உடனடியாக நையும்முனிசா கூச்சலிடவே, சக பயணிகள் சுற்றி வளைத்து அந்த 2 பெண்களையும் பிடித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அந்த பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கர்நாடக மாநிலம் பெங்களூரு யஸ்வந்த்பூரை சேர்ந்த கணேசன் மனைவி கவுதமி (40), அதே பகுதியை சேர்ந்த ஜெய் மனைவி ஆஷா (50) என தெரியவந்தது.

இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவுதமி, ஆஷா ஆகிய 2 பேரையும் கைது செய்து, திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.