பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை கடத்தல், குட்கா விற்பனை, மணல் கடத்துவோர் குறித்து தகவல் தெரிவிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை கடத்தல், குட்கா விற்பனை, மணல் கடத்துவோர் குறித்து பொதுமக்கள் போலீசிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெரம்பலூர்,
முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்–ஆப் போன்ற சமூக வலை தளங்களில் வடமாநிலங்களில் இருந்து பெண்கள் மற்றும் இளைஞர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து குழந்தைகளை கடத்துவது போன்றும், அவர்களை பொதுமக்கள் தாக்குவது போன்றும் தகவல்கள் வெளியாகிறது. இது போன்று குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்கள் யாராவது சந்தேகப்படக்கூடிய வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் தென்பட்டால் அவர்களை பற்றிய தகவல்களை உடனடியாக அருகே உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அல்லது அவசர தொலைபேசி எண் 100–க்கு அல்லது மாவட்ட போலீஸ் அலுவலக தொலைபேசி எண்கள் 04328 –224910, 224962 ஆகியவற்றுக்கு தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிக்க வேண்டும்மேலும் சட்டத்திற்கு புறம்பாக தங்களது பகுதிகளில் யாரேனும் பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது புகையிலை பொருட்களை விற்பனை செய்தாலோ அதுகுறித்து தகவல் அறிந்தால் உடனே போலீஸ் நிலையங்கள் அல்லது சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்பட்ட போலீஸ் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாறாக குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை பொதுமக்களே தாக்குவது போன்ற விபரீத செயல்களில் ஈடுபடக்கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.