பாளையங்கோட்டையில் வேன் கவிழ்ந்து 13 பக்தர்கள் காயம்


பாளையங்கோட்டையில் வேன் கவிழ்ந்து 13 பக்தர்கள் காயம்
x
தினத்தந்தி 14 May 2018 2:00 AM IST (Updated: 14 May 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் வேன் கவிழ்ந்து 13 பக்தர்கள் காயம் அடைந்தனர்.

நெல்லை, 

பாளையங்கோட்டையில் வேன் கவிழ்ந்து 13 பக்தர்கள் காயம் அடைந்தனர்.

வேன் கவிழ்ந்தது

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு புங்கரை பகுதியை சேர்ந்த 20 பேர் சாமி தரிசனம் செய்வதற்காக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சாமி கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவில் ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர்.

அந்த வேன் நேற்று அதிகாலையில் பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையம் அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வேன் ரோட்டில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

13 பேர் காயம்

இதில் வேனில் பயணம் செய்த குமாரதாஸ் (வயது 48), விஷ்ணு (40), லலிதா (43), சுதா (55), சுபா (30), தங்கம் (57), சுப்புராஜ் (36), ஜெயா (51), மாலினி (36), ஜெகன் (36), ஜெகநாதன் (55), நிர்மலா (50), இந்திரகுமார் (8) ஆகிய 13 பேர் காயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story