மாவட்ட செய்திகள்

குடிநீர் பிரச்சினைக்காக கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி போலீசார் சமரசம் + "||" + The villagers try to storm the road for the drinking problem and the police are compromised

குடிநீர் பிரச்சினைக்காக கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி போலீசார் சமரசம்

குடிநீர் பிரச்சினைக்காக கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி போலீசார் சமரசம்
மத்தூர் அருகே குடிநீர் பிரச்சினைக்காக கிராம மக்கள் சாலைமறியல் செய்ய முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.
மத்தூர்,

மத்தூர் அருகே உள்ளது நாகம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் கடும் குடிநீர் பிரச்சினை கடந்த 2 மாதமாக நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலிக்குடங்களுடன் இடும்பன் கோவில் அருகில் சாலை மறியல் செய்வதற்காக நேற்று திரண்டிருந்தனர்.


அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் பொதுமக்கள் கூட்டமாக இருந்ததை கண்டு என்ன பிரச்சினை என விசாரித்தார். அப்போது குடிநீர் பிரச்சினை காரணமாக சாலை மறியல் செய்ய போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சண்முகம், நாகம்பட்டி ஊராட்சி செயலாளர் சண்முகம், ஊர் முக்கிய பிரமுகர்கள் மாதையன், கதிர்வேல் உள்பட பலரிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன், ஆழ்துளை கிணறு உள்ள இடத்தை பார்வையிட்டார்.

அங்கிருந்து சிறு மின்விசை நீர்தேக்க தொட்டிக்கு உடனடியாக பைப்லைன்கள் அமைத்து நீரை ஏற்றும்படியும், அதன் மூலம் குடிநீர் வினியோகத்தை மேற்கொள்ள முடியும் என்று வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை அருகே பரிதாபம்: தீயில் கருகி 53 ஆடுகள் சாவு போலீசார் விசாரணை
தஞ்சை அருகே தீயில் கருகி 53 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. கள்ளக்காதலியுடன் தலைமறைவான வாலிபரின் தம்பி சாவு; 5 பேர் கைது கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
அய்யம்பேட்டை அருகே கள்ளக்காதலியுடன் தலைமறைவான வாலிபரின் தம்பி இறந்தது தொடர்பான வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. திருச்சியில் பரிதாபம் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
திருச்சியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. நாகை அருகே பரிதாபம்: காதலனுடன் தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை போலீசார் விசாரணை
நாகை அருகே சிறுமி ஒருவர் காதலனுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. துறையூர் அருகே குறி சொல்பவர் அடித்துக்கொலை போலீசார் விசாரணை
துறையூர் அருகே குறி சொல்பவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...