கடமலைக்குண்டு பகுதியில் போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடி: போலீஸ் நிலையத்தில் தாசில்தார் புகார்


கடமலைக்குண்டு பகுதியில் போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடி: போலீஸ் நிலையத்தில் தாசில்தார் புகார்
x
தினத்தந்தி 13 May 2018 10:30 PM GMT (Updated: 13 May 2018 10:14 PM GMT)

கடமலைக்குண்டு பகுதியில் போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடி செய்ததாக போலீஸ் நிலையத்தில் தாசில்தார் புகார் செய்துள்ளார்.

கடமலைக்குண்டு,

மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் ஆண்டிப்பட்டி தாசில்தார் செந்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் கடமலைக்குண்டு பகுதியில் இருந்து ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு வாரிசு சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் ஒன்று போலியான முறையில் தயார் செய்யப்பட்டு உண்மையான பெயர்களை நீக்கிவிட்டு வேறு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் போலியான இந்த வாரிசு சான்றிதழை பயன்படுத்தி நிலம் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. போலி சான்றிதழ் தயார் செய்ததில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது. இதேபோல வேறு ஆவணங்கள் ஏதும் தயார் செய்யப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளதா? என கண்டறிய வேண்டும், என தெரிவித்திருந்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் போலி ஆவணங்கள் தயார் செய்ததாக கடமலைக்குண்டுவை சேர்ந்த பத்திர எழுத்தர் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் விசாரணை முடிந்து புகார் குறித்த அறிக்கை தாசில்தாரிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story