கார் மீது ஆட்டோ மோதி விபத்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உயிர் தப்பினார்


கார் மீது ஆட்டோ மோதி விபத்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 14 May 2018 3:45 AM IST (Updated: 14 May 2018 3:45 AM IST)
t-max-icont-min-icon

கார் மீது ஆட்டோ மோதிய விபத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

மும்பை, 

கார் மீது ஆட்டோ மோதிய விபத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

விருந்து நிகழ்ச்சி

இந்தி திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர் சம்பவத்தன்று இரவு நடிகர் சல்மான்கானின் கேலக்சி அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அவர் காரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பாந்திரா கேர்ட்டர்ரோடு பகுதியை நெருங்கியபோது, அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோ ஒன்று நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் காரில் பயங்கரமாக மோதியது.

உயிர் தப்பினார்

இருப்பினும் இந்த விபத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் மது போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story