கோர்ட்டில் வேலை


கோர்ட்டில் வேலை
x
தினத்தந்தி 14 May 2018 3:37 PM IST (Updated: 14 May 2018 3:37 PM IST)
t-max-icont-min-icon

மாவட்ட கோர்ட்டில் டிரைவர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஆபீஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணிகளுக்கு 90 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் டிரைவர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஆபீஸ் அசிஸ்டன்ட், எக்ஸாமினர், ரீடர், இரவுக் காவலாளி, சுகாதார பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 90 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் கணினி ஆபரேட்டர் பணிக்கு 28 பேரும், ஜெராக்ஸ் ஆபரேட்டர் பணிக்கு 9 பேரும், ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு 20 பேரும், இரவுக் காவலாளி பணிக்கு 18 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். 8,10-ம் வகுப்பு படித்தவர்களுக்கும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. 35 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகளை இணைக்க வேண்டும். விண்ணப்பம் 28-5-2018-ந் தேதிக்குள் மாவட்ட நீதிமன்ற முகவரியை சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை http://ecourts.gov.in/tn/dindigul என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

Next Story