பல் மருத்துவர்கள் ராணுவத்தில் சேர்ப்பு


பல் மருத்துவர்கள் ராணுவத்தில் சேர்ப்பு
x
தினத்தந்தி 14 May 2018 10:22 AM GMT (Updated: 14 May 2018 10:22 AM GMT)

இந்திய ராணுவத்தில் பல் மருத்துவ பிரிவில் மருத்துவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

ந்திய ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கையின் கீழ் இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ஆர்மி டென்டல் கார்ப்ஸ் எனும் ராணுவப் பிரிவில் பல் மருத்துவம் படித்தவர்களை பணிக்கு அமர்த்தும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 34 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இவை ஷாட் சர்வீஸ் கமிஷனின் கீழ் வரும் அதிகாரி தரத்திலான பணியிடங்களாகும்.

இந்த பயிற்சி சேர்க்கையி்ல் சேர விரும்புபவர்கள் 31-12-2018-ந் தேதியில் 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். பி.டி.எஸ்., எம்.டி.எஸ். பல்மருத்துவ படிப்புகளை படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்.

விருப்பமுள்ளவர்கள் www.indianarmy.nic.in என்ற இணைய தள முகவரியில் முழுமையாக பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 31-5-2018-ந் தேதியாகும். 

Next Story