மாவட்ட செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + The tasmack Employees Association demonstrated

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விழுப்புரத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

விழுப்புரம்,

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று காலை டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், மாநில துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் குப்புசாமி, மாநில செயலாளர் வீரப்பன், மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் ரகோத், அன்பழகன், செயலாளர் ரமேஷ், இணை செயலாளர் சக்திவேல், பிரசார செயலாளர் பிரபாகரன், அமைப்பு செயலாளர் அசோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. விசாரணை என்கிற பெயரில் மயக்க ஊசி போட்டு துன்புறுத்தியதாக வனத்துறையினரை கண்டித்து மலை வாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
விசாரணை என்கிற பெயரில் மயக்க ஊசி போட்டு துன்புறுத்தியதாக வனத்துறையினரை கண்டித்து பொள்ளாச்சியில் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டம்
2. மழைநீருடன் கழிவுநீர் கலந்து நிற்பதற்கு எதிர்ப்பு: பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
மழைநீருடன் கழிவுநீர் கலந்து நிற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. திருப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற டாஸ்மாக் கண்காணிப்பாளரிடம் நூதன முறையில் ரூ.2 லட்சம் வழிப்பறி
திருப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற டாஸ்மாக் கண்காணிப்பாளரிடம் நூதன முறையில் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 400–ஐ வழிப்பறி செய்த வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம் தாசில்தாரை கண்டித்து, கடலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. குட்கா ஊழலை கண்டித்து ஈரோட்டில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
குட்கா ஊழலை கண்டித்து ஈரோட்டில் தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.