10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 May 2018 11:00 PM GMT (Updated: 14 May 2018 10:00 PM GMT)

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மருது தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சங்கர் வரவேற்றார். சென்னை தொழிலாளர் சங்க தலைவர் நடராசன், மாநில தலைவர் மணி, செயலாளர் வெங்கடேசன், துணைத்தலைவர் லோகநாதன், பொருளாளர் ரவீந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் பஞ்சாட்சரம், மணிவண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

பதிவு பெற்ற கட்டுமான தொழிற்சங்கங்களுக்கு அரசு சார்ந்த அனைத்து கட்டுமான பணிகளையும் ஒப்பந்த அடிப்படையில் வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும், மீனவர்களுக்கு வழங்குவதுபோல் கட்டுமான தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை செயலாளர் நரசிங்கம், பொருளாளர் கொளஞ்சி, துணைத்தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமணன் நன்றி கூறினார்.


Next Story