ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி 93 பேர் கைது


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி 93 பேர் கைது
x
தினத்தந்தி 14 May 2018 11:00 PM GMT (Updated: 14 May 2018 10:09 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இளைஞர் பெருமன்றத்தினர் 93 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி,

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்டக்குழுவினர் நேற்று காலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும். ஆற்றுமணல், தாது மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

இந்த போராட்டத்துக்கு, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சந்தனசேகர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுப்புத்துரை, கணேசன், ராமசந்திரன், பெருமாள், காளி பலவேசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

93 பேர் கைது

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிஹரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துமாலை, முத்துகணேஷ் மற்றும் போலீசார், போராட்டக்காரர்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தடுத்து நிறுத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 93 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மடத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். 

Next Story