மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள்கள் மோதல்; புதுமாப்பிள்ளை பலி மனைவி உள்பட 3 பேர் படுகாயம் + "||" + Motorcycle collision; Three people including a wife were injured

மோட்டார்சைக்கிள்கள் மோதல்; புதுமாப்பிள்ளை பலி மனைவி உள்பட 3 பேர் படுகாயம்

மோட்டார்சைக்கிள்கள் மோதல்; புதுமாப்பிள்ளை பலி மனைவி உள்பட 3 பேர் படுகாயம்
தொப்பூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியானார். அவருடைய மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
நல்லம்பள்ளி,

தர்மபுரி பாரதிபுரத்தை சேர்ந்தவர் விஜயராஜன் (வயது 29). இவர் தோட்டக் கலைத்துறை தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றி வந்தார். இவருக்கும் சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த சுகுணா (22) என்பவருக்கும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயராஜன், தனது மனைவி சுகுணாவுடன் மோட்டார்சைக்கிளில் மேச்சேரியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்து மீண்டும் இருவரும் மோட்டார்சைக்கிளில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

தொப்பூர் அருகே உள்ள பாளையம்புதூர் கூட்ரோட்டில் வந்த போது எதிரே வந்த மோட்டார்சைக்கிளும், விஜயராஜன் சென்ற மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த விஜயராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் சுகுணா, மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த பாளையம்புதூரை சேர்ந்த விஜி (30), ஊத்துபள்ளம் பகுதியை சேர்ந்த முருகன் (39) ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 20 நாட்களுக்குள் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. குடிசையில் தீ விபத்து: உடல் கருகி மூதாட்டி பரிதாப சாவு
போச்சம்பள்ளி அருகே குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
2. புளியந்தோப்பில் பரிதாபம்: தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி
புளியந்தோப்பில், தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
3. தூத்துக்குடியில் பயங்கரம் தடுப்புச்சுவர்–லாரியில் கார் மோதி விபத்து: வாலிபர் பலி மற்றொருவர் படுகாயம்
தூத்துக்குடியில் தடுப்புச்சுவர்–லாரியில் அடுத்தடுத்து கார் மோதி நொறுங்கிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
4. 4–வதும் பெண் குழந்தை என கருதி கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி சாவு; நர்ஸ் கைது
உசிலம்பட்டி அருகே 4–வதும் பெண் குழந்தை என கருதி கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார். அவருக்கு கருக்கலைப்பு செய்த நர்ஸ் கைது செய்யப்பட்டார்.
5. மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி முன்னாள் கலெக்டரின் மகன் பலி
கோவையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் முன்னாள் கலெக்டரின் மகன் பலியானார். மற்றொரு விபத்தில் வங்கி மேலாளர் இறந்து போனார்.