மாவட்ட செய்திகள்

அ.ம.மு.க. ஒன்றிய ஆலோசனை கூட்டம் + "||" + Amamuka Union consultation meeting

அ.ம.மு.க. ஒன்றிய ஆலோசனை கூட்டம்

அ.ம.மு.க. ஒன்றிய ஆலோசனை கூட்டம்
அரியலூர் மாவட்டம், திருமானூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல் முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் அரியலூர் சுந்தரமூர்த்தி, தா.பழூர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் மூக்கையாபாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் ரெங்கசாமி, கடலூர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் மற்றும் அரியலூர் மாவட்ட செயலாளர் முத்தையன் ஆகியோர் கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினர். முன்னதாக திருமானூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கூட்டத்தில், தமிழக மக்களின் குடிநீர் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். 8 மாவட்டங்களின் நீராதாரமாக விளங்கும் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். 100 நாள் வேலை வழங்க வேண்டும். அ.ம.மு.க.வில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அ.ம.மு.க. நிர்வாகி கரும்பாயிரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. தார்சாலை அமைக்க கோரி, கலெக்டர் அலுவலகத்துக்கு ஜல்லிக்கற்கள், சிமெண்டு கலவையுடன் வந்து மனு
தார்சாலை அமைக்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு ஜல்லிக்கற்கள், சிமெண்டு கலவையுடன் வந்தவர் களால் பரபரப்பு ஏற்பட்டது.
2. அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
3. அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
4. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு ஊதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
5. விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என விழிப்புணர்வு கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் கூறினார்.