ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ராஜஸ்தான் போலீசார் 2 பேர் கைது
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ராஜஸ்தான் போலீசார் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புனே,
புனேயை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் மீது ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்லால் (வயது56), போலீஸ்காரர் தர்மா சிங் (26) ஆகியோர் தொழிலதிபரை தேடி புனே வந்தனர். அப்போது வீட்டில் தொழில் அதிபரின் மனைவி மட்டுமே இருந்துள்ளார். போலீசார் 2 பேரும் அந்த பெண்ணிடம் கணவரை கைது செய்யாமல் இருக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண்ணின் அண்ணன் புனே லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு துறையினர் கொடுத்த யோசனையின் பேரில் அவர் சம்பவத்தன்று புனே ரெயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் தங்கியிருந்த ராஜஸ்தான் போலீசாரை சந்தித்து ரூ.50 ஆயிரம் கொடுத்தார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் ராஜஸ்தான் போலீசார் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story