மாவட்ட செய்திகள்

விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கத்துடன் 2 பேர் கைது + "||" + 2 arrested with gold in the airport

விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கத்துடன் 2 பேர் கைது

விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கத்துடன் 2 பேர் கைது
விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கத்துடன் வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,

மும்பை விமான நிலை யத்தில் ரூ.2 கோடியே 11 லட்சம் மதிப்புள்ள தங்கத்துடன் வெளிநாட் டை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது 2 பயணிகளின் நடவடிக்கையில் சுங்க துறை புலனாய்வு பிரிவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவர்கள் 2 பேரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர்.


அப்போது அவர்கள் ஆடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதிகாரிகள் 2 பேரிடமும் இருந்து ரூ. 2 கோடியே 11 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் மடகாஸ்கரை சேர்ந்த யோகய் ரபிடைசன், பிரான்சை சேர்ந்த ராஜீவ் என்பது தெரியவந்தது. 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி அருகே: மீனவர் கொலையில் 2 பேர் கைது
தூத்துக்குடி அருகே மீனவர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. புதுவை விமான நிலையத்தில் வெங்கையாநாயுடுவிற்கு வரவேற்பு
புதுவை வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
3. விமான நிலையத்தில் செயற்கைகோள் போன்: இஸ்ரேல் பயணி கைது
மேற்கு வங்காள விமான நிலையத்தில் செயற்கைகோள் போன் வைத்திருந்த இஸ்ரேல் பயணி கைது செய்யப்பட்டார்.
4. சாராயம் கடத்தல்; 2 பேர் கைது: மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
மயிலாடுதுறை அருகே சாராயம் கடத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். சாராயம் கடத்தி வர பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
5. விமான நிலையத்தில் ‘கிருமி அபாயம்’!
பளபளப்பாகவும் பரபரப்பாகவும் திகழும் விமான நிலையங்களிலும் கிருமி அபாயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை