மாவட்ட செய்திகள்

தமிழகத்தை பாலைவனமாக்கக்கூடாது என்று கூறி கலெக்டர் அலுவலகம் முற்றுகை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 29 பேர் கைது + "||" + Siege of the Collector office All Youth Council members arrested

தமிழகத்தை பாலைவனமாக்கக்கூடாது என்று கூறி கலெக்டர் அலுவலகம் முற்றுகை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 29 பேர் கைது

தமிழகத்தை பாலைவனமாக்கக்கூடாது என்று கூறி கலெக்டர் அலுவலகம் முற்றுகை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 29 பேர் கைது
தமிழகத்தை பாலைவனமாக ஆக்கிவிடக்கூடாது என்று கூறி தேனி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினரை போலீசார் கைது செய்தனர்.

தேனி,

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட செயலாளர் தமிழ்பெருமாள் தலைமையில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்களுடன் மாவட்ட துணைச் செயலாளர் பாரதி மற்றும் நிர்வாகிகள் பலர் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிரந்தரமாக கைவிட வேண்டும். ஆற்றுமணல், தாது மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாத்து, தமிழகம் பாலைவனம் ஆவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடந்தது.

இதையடுத்து முற்றுகையிட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநில துணைச் செயலாளர் பாரதி உள்பட 29 பேரை போலீசார் கைது செய்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. நங்கநல்லூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; என்ஜினீயர் கைது
நங்கநல்லூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். கடன் தொல்லையால் கொள்ளையடிக்க முயன்றதாக போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
2. திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 63 ஆயிரத்து 320 பேர் பதிவு; கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 63 ஆயிரத்து 320 பேர் பதிவு செய்துள்ளனர் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
3. ஓட்டேரியில் மளிகை கடைக்காரரிடம் வழிப்பறி; 3 பேர் கைது
ஓட்டேரியில் மளிகை கடைக்காரரிடம் செல்போனை பறித்துச்சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. இருவேறு இடங்களில் ரூ.12 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் : 2 பேர் கைது
மும்பை காட்கோபர்- மான்கூர்டு லிங் சாலையில் ஒருவர் போதைப்பொருளுடன் வருவதாக காட்கோபர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.
5. நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும் காரணிகள் ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.