மாவட்ட செய்திகள்

நிரவ் மோடியின் வங்கிக்கடன் மோசடி வழக்கு: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் வங்கி அதிகாரிகளின் 4 பேர் பெயர்கள் + "||" + Nirav Modi's bank fraud case: CBI Four of the bank officials were named in the charge sheet

நிரவ் மோடியின் வங்கிக்கடன் மோசடி வழக்கு: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் வங்கி அதிகாரிகளின் 4 பேர் பெயர்கள்

நிரவ் மோடியின் வங்கிக்கடன் மோசடி வழக்கு: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் வங்கி அதிகாரிகளின் 4 பேர் பெயர்கள்
சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் வங்கி அதிகாரிகளின் 4 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
மும்பை,

நிரவ் மோடியின் வங்கிக்கடன் மோசடி வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் வங்கி அதிகாரிகள் 4 பேரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்டார். அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்த நிலையில் நிரவ்மோடியும், அவருடைய குடும்பத்தினரும் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. நேற்று மும்பை தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.


அதில், பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் முன்னாள் தலைவரும்(2015-17), தற்போது அலகாபாத் வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ள உஷா அனந்தசுப்பிரமணியம், பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர்கள் கே.வி.பிரன்மாஜி ராவ், சஞ்சீவ் ‌ஷரண் மற்றும் பொதுமேலாளர்(சர்வதேச செயல்பாடு) நெஹல் அஹாத் ஆகிய 4 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

இந்த மோசடியில் நிரவ் மோடி, அவருடைய சகோதரர் நிஷால் மோடி மற்றும் நிரவ் மோடி நிறுவனத்தின் நிர்வாகி சுபாஷ் பாரப் ஆகியோருக்கு இடையேயான தொடர்பு குறித்தும் விரிவாக கூறப்பட்டு உள்ளது. வங்கி மோசடியில் நிரவ் மோடியின் மாமா மெகுல் சோக் ஷியின் பங்களிப்பு பற்றி சி.பி.ஐ. அடுத்து தாக்கல் செய்யும் துணை குற்றப்பத்திரிகையில் இடம்பெறும் என்று சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. நிரவ் மோடியை பார்த்ததே கிடையாது ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லி பதில்
நிரவ் மோடியை பார்த்ததே கிடையாது என ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பதிலளித்துள்ளார்.
2. மல்லையா, நிரவ் மோடியுடன் நட்பு; எங்களுக்கு எதிராக ஐடி ரெய்டா? மத்திய அரசு மீது அரவிந்த் கெஜ்ரிவால் பாய்ச்சல்
டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெல்லாட்டிற்கு சொந்தமான 15 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3. நிரவ் மோடி விற்ற போலி வைரம் காரணமாக காதலியை பிரிந்த இளைஞர் கோர்ட்டில் வழக்கு
நிரவ் மோடி விற்ற போலி வைரம் காரணமாக இளைஞரின் திருமணம் கைகூடாமல் சென்றது, இதனையடுத்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
4. நிரவ் மோடியின் ரூ.637 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியது!
நிரவ் மோடியின் வெளிநாட்டுக்கள் சொத்துக்கள் உள்பட ரூ. 637 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.
5. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணையை முடிக்க சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவுக்கு மேலும் 3 மாதம் அவகாசம்
தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், 2006–ம் ஆண்டு, மத்தியில் மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, நிதி மந்திரி பதவி வகித்தார்.