மாவட்ட செய்திகள்

ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 8 பவுன் நகை, ரூ.4 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு + "||" + The retired teacher's house was 8 pound jewelery and Rs 4 lakh for the robbers

ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 8 பவுன் நகை, ரூ.4 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 8 பவுன் நகை, ரூ.4 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
தோகைமலை அருகே ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 8 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை கொள்ளையடுத்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தோகைமலை,

தோகைமலை அருகே உள்ள வடசேரி ஊராட்சி காவல்காரன்பட்டியில் உள்ள ஆலத்தூரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை நிமிலா. நேற்று முன்தினம் இரவு வீட்டில் காற்றோட்டத்திற்கா கதவை திறந்து வைத்து விட்டு நிமிலா மற்றும் அவரது கணவர் ரெங்கராஜ், அவரது மருமகள் பிரியா ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நிமிலாவின் மகன் கோபிநாத் புதுவாடியில் உள்ள தங்களது உறவினர் வீட்டு திருவிழாவிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.


கொள்ளை

இந்த நிலையில் நள்ளிரவில் 4 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து அங்கு தூங்கி கொண்டு இருந்த ஓய்வுப்பெற்ற ஆசிரியை நிமிலா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியையும், அருகில் தூங்கி கொண்டு இருந்த பிரியா கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி சங்கிலியையும் பறித்தனர். இதில் அதிர்ச்சி அடைந்த பிரியா திருடன், திருடன் என்று சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வீட்டில் இருந்து வெளியே வர முற்பட்ட போது அவர்களது வீட்டின் வெளிபுறத்தில் உள்ள கதவின் தாழ்பால் திருடர்களால் ஏற்கனவே சாத்தப்பட்டு இருந்தது. இதனால் அவர்களால் உடனே உதவிக்கு வரமுடியவில்லை. இந்த நிலையில் வீட்டில் இருந்த நிமிலா, ரெங்கராஜ், பிரியா ஆகியோரை மிரட்டி பீரோ சாவியை வாங்கிய திருடர்கள் பீரோவில் இருந்த ரூ.3 லட்சத்து 92 ஆயிரத்தையும் அவர்களின் கண் எதிரோ எடுத்துக்கொண்டு திருடர்கள் தப்பியோடி விட்டனர்.

வலைவீச்சு

இதுகுறித்து நிமிலா தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பிறகு இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்கருப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
தென்தாமரைகுளம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. தஞ்சையில் விஷம் குடித்து தனியார் பஸ் ஊழியர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
தஞ்சையில் தனியார் பஸ் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. கும்பகோணத்தில் வாய்க்காலில், சைக்கிளுடன் பிணமாக கிடந்த ஓட்டல் ஊழியர் கொலையா? போலீசார் விசாரணை
கும்பகோணத்தில் வாய்க்காலில் ஓட்டல் ஊழியர் ஒருவர் சைக்கிளுடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. நீடாமங்கலத்தில் பரபரப்பு: தீயில் கருகி கிடந்த மோட்டார்சைக்கிள் குடும்ப தகராறில் தீ வைத்த வாலிபருக்கு போலீசார் எச்சரிக்கை
நீடாமங்கலத்தில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் மோட்டார்சைக்கிள் ஒன்று தீயில் கருகி கிடந்தது. இதுபற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குடும்ப தகராறில் வாலிபர் ஒருவர் மோட்டார்சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது. அவரை ரெயில்வே போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
5. உடையார்பாளையம் அருகே கடத்தப்பட்ட பள்ளி மாணவி மீட்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
உடையார்பாளையம் அருகே கடத்தப்பட்ட பள்ளி மாணவி மீட்கப்பட்டார். அவரை கடத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.