ஏ.டி.எம். மையங்கள் பூட்டிக்கிடப்பதால் பொதுமக்கள் அவதி


ஏ.டி.எம். மையங்கள் பூட்டிக்கிடப்பதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 16 May 2018 4:15 AM IST (Updated: 16 May 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூரியில் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் பூட்டிக்கிடப்பதால் பொதுமக்கள் பணம் எடுக்க அவதிப்படுகின்றனர்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து செயல்படாமல் வாரக்கணக்கில் பூட்டியே கிடக்கின்றன. மேலும் சில ஏ.டி.எம். மையங்கள் ஒரு நாள் திறக்கப்பட்டால் மறுதினம் முதல் பூட்டியே கிடக்கின்றன. இதனால் பணம் எடுக்க அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.

நடவடிக்கை

மேலும் ஏ.டி.எம். மையங்கள் பூட்டியே கிடப்பதால் குடும்ப செலவுகள் மற்றும் அவசர தேவைகளுக்கு கூட பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பல வகையில் சிரமப்படுவதாகவும் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூட்டப்பட்டுள்ள ஏ.டி.எம். மையங்களை திறக்க நடவடிக்கை எடுத்து வழக்கம் போல் சேவையை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story