1 லட்சத்து 78 ஆயிரத்து 528 பேருக்கு மடிக்கணினிகள்; கலெக்டர் ரோகிணி தகவல்


1 லட்சத்து 78 ஆயிரத்து 528 பேருக்கு மடிக்கணினிகள்; கலெக்டர் ரோகிணி தகவல்
x
தினத்தந்தி 15 May 2018 11:30 PM GMT (Updated: 15 May 2018 10:40 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு முதல் இதுவரை 1 லட்சத்து 78 ஆயிரத்து 528 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ரோகிணி கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு இதுவரை 1 லட்சத்து 78 ஆயிரத்து 528 பேருக்கு ரூ.220 கோடியே 82 லட்சத்தில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழை, எளிய மாணவ- மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை மூலம் பல்வேறு திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். விலையில்லா மடிக்கணினி மூலம் பொது அறிவு புத்தகங்களை பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துக் கொண்டு தொடர்ந்து படித்து பயன்பெற வேண்டும். மேலும் மாணவ-மாணவிகள் த ங்கள் பெற்றோரின் கனவை நிறைவேற்றி எதிர்கால லட்சியத்தை நிறைவேற்ற பாடுபட வேண்டும்.

தமிழக அரசு கல்வி வளர்ச்சிக்கென ஒவ்வொரு பருவத்திலும் மாணவர்களின் தேவைகளை அறிந்து உதவி செய்து வருகிறது. மேலும், கல்வித்துறையின் மூலம் வழங்கப்படும் அனைத்து திட்டங்களும் சேலம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 2011-12-ம் ஆண்டில் 24 ஆயிரத்து 408 மாணவ, மாணவிகளுக்கு ரூ.30 கோடியே 19 லட்சத்தில் மடிக்கணிகள் வழங்கப்பட்டு உள்ளன. அதே போன்று 2012-13-ம் ஆண்டில் 24 ஆயிரத்து 889 மாணவ, மாணவிகளுக்கு ரூ.30 கோடியே 78 லட்சத்திலும், 2013-14-ம் ஆண்டில் 26 ஆயிரத்து 4 பேருக்கு ரூ.32 கோடியே 17 லட்சத்திலும், 2014-15-ம் ஆண்டில் 26 ஆயிரத்து 595 பேருக்கு ரூ.32 கோடியே 90 லட்சத்திலும் வழங்கப்பட்டு உள்ளன.

2015-16-ம் ஆண்டில் 25 ஆயிரத்து 281 பேருக்கு ரூ.31 கோடியே 27 லட்சத்திலும், 2016-17-ம் ஆண்டில் 25 ஆயிரத்து 664 பேருக்கு ரூ.31 கோடியே 74 லட்சத்திலும்,2017-18-ம் ஆண்டில் 25 ஆயிரத்து 687 பேருக்கு ரூ.31 கோடியே 77 லட்சத்திலும் என 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு இதுவரை 1 லட்சத்து 78 ஆயிரத்து 528 பேருக்கு ரூ.220 கோடியே 82 லட்சத்தில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story