மாவட்ட செய்திகள்

போக்குவரத்து சிக்னல்களில் கோடை வெயிலுக்கு நிழல் பந்தல் + "||" + Shade paddle for summer sunshine in traffic signals

போக்குவரத்து சிக்னல்களில் கோடை வெயிலுக்கு நிழல் பந்தல்

போக்குவரத்து சிக்னல்களில் கோடை வெயிலுக்கு நிழல் பந்தல்
வாகன ஓட்டிகள் அவதிப்படுவதை தடுக்க போக்குவரத்து சிக்னல்களில் கோடை வெயிலுக்கு நிழல்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர்,

கோடை காலத்தில் வேலூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்தாண்டும் கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது.

இந்த வெயிலினால் வாகன ஓட்டிகள் அதிகம் சிரப்படுகின்றனர். அவர்கள் சாலையில் போக்குவரத்து சிக்னல்களை கடந்து செல்லும்போது, சிக்னல்களில் சிக்கிக் கொண்டு வெயிலில் காத்திருப்பதால் அவதிப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.


இந்த நிலையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வேலூர் செயின்ட் ஜான்ஸ் நர்சிங் கல்லூரி மற்றும் டாக்டர் விமல் நர்சிங் கல்லூரி சார்பில் போக்குவரத்து போலீசார் அனுமதியுடன் வேலூர் மாநகரின் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளான ஊரீசு கல்லூரி, தெற்கு, வடக்கு போலீஸ் நிலைய பகுதிகளில் நிழல்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழல்பந்தல் 60 அடி நீளம், 30 அடி அகலம் கொண்டவையாகும். இந்த வசதி வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்ற நிழல்பந்தல் இன்று (புதன்கிழமை) கிரீன் சர்க்கிள் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.