ராதாபுரம் அருகே மின்னல் தாக்கி 29 ஆடுகள் சாவு


ராதாபுரம் அருகே மின்னல் தாக்கி 29 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 17 May 2018 2:30 AM IST (Updated: 16 May 2018 4:41 PM IST)
t-max-icont-min-icon

ராதாபுரம் அருகே மின்னல் தாக்கி 29 ஆடுகள் உயிரிழந்தன.

ராதாபுரம், 

ராதாபுரம் அருகே மின்னல் தாக்கி 29 ஆடுகள் உயிரிழந்தன.

மின்னல் தாக்கி...

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே பரமேசுவரபுரத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் இவர் ஊருக்கு வடபுறம் உள்ள வரகுணராமபேரி குளத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

மதியம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, குளத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களின் அடியில் ஆடுகள் ஒதுங்கின. அப்போது மின்னல் தாக்கியதில் 29 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. சங்கரலிங்கம் சற்று தொலைவில் மற்றொரு மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தாசில்தார் பார்வையிட்டார்

மின்னல் தாக்கி இறந்த ஆடுகளை ராதாபுரம் தாசில்தார் முகமது புகாரி நேற்று காலையில் பார்வையிட்டார். பின்னர் அவர், இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

மின்னல் தாக்கி இறந்த ஆடுகளை கால்நடைத்துறை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அவற்றை புதைத்தனர்.


Next Story